
எங்கோ கேட்கிறது. நம் வாழ்க்கையில் எப்பொழுது என்று ஏங்கும் நெஞ்சங்களின் அழுகை ஒலி நமக்கு கேட்கிறதா!
மாலை சூடும் மணநாள் ஒரு மங்கையின் வாழ்வில் திருநாள் என்பது பல பெண்களின் வாழ்க்கையில் கனவில் மட்டுமே நிகழும் நிகழ்ச்சியாகிவிடுகிறது.
எத்தனையோ குடும்பங்களில் பெண்களுக்கு அழகு, கல்வி, செல்வம் ஆகிய அனைத்து நற்குணங்களும் இருந்தும் அந்தப் பெண்ணுக்கு திருமணம் காலதாமதமாவது ஏன்?
சில பெண்களின் வாழ்க்கையில் பெண்பார்க்கும் படலம் மட்டுமே நடந்துவிடுகிறது. அதற்குமேல் எதுவும் நிகழ்வதில்லை அதனால் பலபேர்களின் விமர்சனத்திற்கு ஆளாகிறாள்.
ஒரு ஆணுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் அதை யாரும் பெரிதுபடுத்தாமல் அவனுக்கு பிரம்மச்சாரி என்ற பட்டத்தை கொடுத்துவிடுகிறார்கள்.
ஆனால் ஒரு பெண்ணின் நிலைமையோ சொல்லவே வேண்டாம். அக்கம், பக்கம்,உற்றார், உறவினர் ஆகியோரின் ஏளனப் பேச்சு தாங்காமல் அவள் எங்கும் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியது ஆகி விடுகிறது.
குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்ல வேண்டிய பெண்ணாய் இருந்தால் அவள் எத்தனை பேச்சுக்கு ஆளாகிறாள். பொது நிகழ்ச்சிகளில் அவளால் கலந்து கொள்ள முடியவில்லை. அவளை ஒதுக்கி விடுகிறார்கள். அவள் பார்வை பட்டாலே அவர்கள் வாழ்க்கை போவதுபோல எண்ணுகிறார்கள். அதனால் அவள் மன வேதனைப்பட்டு ஏன் பிறந்தோம், எதற்காக பிறந்தோம்? என்று நித்தம் நித்தம் அவள்விடும் கண்ணீர் கங்கையின் வெள்ளம்போல் ஓடுகிறது.
அவளால் வேறு என்ன செய்ய முடியும். அவள் விடும் கண்ணீருக்கு என்ன காரணம்? யார் காரணம்? பெற்றோர் காரணமா? தன் உடன் பிறப்பு காரணமா? உற்றார் உறவினர் காரணமா?
குல வழி வந்த சாபமா? பெற்றோர்கள் செய்த பாவமா? அவளது ஊழ்வினை காரணமா? செய்வினைகளால் ஏற்பட்ட கோளாறா? செவ்வாய் தோஷமா? ராகு கேது தோஷமா? பிதுர் தோஷமா? திருஷ்டி தோஷமா? மற்றவர்களின் இடையூறு காரணமா? ஜென்ம ஜாதக தோஷமா?
பெண் பூப்படையும நேரம், நட்சத்திரம், கிழமை, மாதம், லக்னம் மற்றும் ராசியினால் ஏற்படும் தோஷங்களின் காரணமா?
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani


+91 75980 38063

contact@vetriveljothidalayam.com

41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.

41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.