நன்கு திறம்பட செழிப்புடன் இயங்கி வரும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், வியாபார ஸ்தாபனங்களால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. அப்பொழுது அந்த தொழிலை நடத்திவரும் இயக்குநர்கள் அவர்களுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகின்றார்கள். அந்த மக்களும் அவரை நாணயஸ்தன், வாக்கு மாறாதவர், கண்ணியவான், அள்ளிக்கொடுப்பதில் தருமசீலன் என்று வானளாவ புகழ்கின்றார்கள். ஆனால் அவர்களது கிரக அமைப்பு மாறும்பொழுது திடீரென அவர்களது தொழில் நலிவடைய ஆரம்பித்து அவர்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கி அவர்களது அன்றாட குடும்பத்தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
அவர்களை புகழ்ந்து பேசிய மக்களே அவரை மிகவும் இழிவாக பேசி ஊர்விட்டு நகரம்விட்டு ஓடி ஒளியச் செய்து அவரது வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்து விடுகிறது. இதைப் போன்ற சம்பவங்கள் அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு மனிதனின் கிரக அமைப்பு நன்றாக இருக்கும் காலத்தில் செழிப்புடன் வாழ்கிறான். நாம் இப்படியே வாழ்ந்துவிடுவோம் என்று நினைத்து அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடுகிறான். ஆதனால் திடீரென பாதிப்பு ஏற்படும்பொழுது அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
நாம் நன்றாக இருக்கும்பொழுதே ஜாதக ரீதியாக அடுத்து நமக்கு என்ன நடக்கப்போகிறது என்று ஆராய்ந்து பின்னால் வரும் சிக்கல்களை தீர்க்க வழிகண்டு நடந்தால், அவர்களது வாழ்க்கையும் பாதிக்காது. அவர்களை நம்பியிருக்கும் குடும்பத்தையும் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையும் பாதிக்காது.
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்தக் கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளைக் குறைத்து நற்பலன்கள் பெற்ற மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani


+91 75980 38063

contact@vetriveljothidalayam.com

41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.

41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.