வாழ வழிகாட்டும் ஒப்பற்ற கலைகளில் ஜோதிடக் கலையே பிரதானமாகும்.

ஜாதகம் என்பது அவரவர் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளின் தன்மைகளைப் பார்த்து உணர்ந்து, நல்வினை செய்தோர் நன்மைகளையும், தீவினை செய்தோர் தீவினைகளையும் அடையும்படி பிரம்மதேவன் செய்த கோட்பாடு.
கடந்தகாலம், நிகழ்காலம், வரும்காலம் ஆகிய நிலைகளை நமக்கு உள்ளது உள்ளபடி கூறுகிறது ஜாதகம்.
நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரகங்கள் உதவுகின்றன.
பல பிரச்சனைகளால் மனம் சஞ்சலம் அடையும் பொழுதுதான் நவக்கிரகங்களை பற்றியும் அவைகளினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
எந்த மனிதனும் துன்பமான வாழ்க்கையையோ, கஷ்டத்தையோ ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. சந்தோஷமாக சுகபோகமான வாழ்க்கையை வாழத்தான் விரும்புவார்கள். ஆனால், காலத்தின் கட்டாயமாக சிலரது வாழ்வில் பல பிரச்சனைகள் வந்துவிடுகிறது. அந்த சமயத்தில் அவர்களது ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து என்ன செய்தால் இவர்களுக்கு விடிவுகாலம் என்று ஆராய்ந்து கூறி மனதை திடப்படுத்தி ஆபத்து என்னும் கடலைக் கடக்க தகுந்த தெப்பம் போல் உதவுகின்றது - ஜாதகம்.
ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்களிலிருந்து விடுபட அக்காலத்தில் சித்தர்கள், முனிவர்கள் பல வழிகளை கூறியுள்ளார்கள். அதில் பரிகாரங்கள், தெய்வவழிபாடு, மந்திரங்கள்,கோமம், வேள்விகள், மூலிகை ரட்சைகள், மூலிகை அஞ்ஜனங்கள்(மை) இவைகளை பயன்படுத்தி தன்னைப் பாதுகாத்து கொண்டு வளமாக வாழ வழி காட்டியுள்ளனர்.
கடவுளை நோக்கி நாம் உள்ளன்போடு தவம் போல் இருந்து இந்த வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
"நவகிரகங்களின் பொன்னடி பணிவோர்க்கு வினையானது நாசமாகும்." என்பது ஆன்றோர் வாக்கு. துன்பங்களிலிருந்து விடுபட இதுவே உபாயமாகும். அப்படி நீக்கி கொள்ளாதது அவர்களது விதியே ஆகும்.
உங்களது வாழ்க்கை ஒளிமயமாக "வெற்றிவேல் ஜோதிடாலயம் சாரிடபிள் டிரஸ்டை" அணுகி உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வளமாக வாழுங்கள்.
வெற்றிவேல் ஜோதிடாலயம் சாரிடபிள் டிரஸ்டில் கோமங்கள் செய்வதற்கு உண்டான முறைகள், யந்திரங்கள், மூலிகை ரட்சைகள், மூலிகை அஞ்ஜனங்கள்(மை) கிடைக்கும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani


+91 75980 38063

contact@vetriveljothidalayam.com

41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.

41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.