நடந்து முடிந்த திருமண வாழக்கை கோர்ட்டுக்கு செல்வது ஏன்?
விவாகரத்து !!!
பத்துப் பொருத்தங்களை பார்த்து.....
ஒன்பது கோள் நிலைகளை அறிந்து.....
எட்டுதிசையிலிருந்தும் உறவை அழைத்து.....
ஏழு அடி எடுத்து வைத்து.....
அறுசுவை உணவு படைத்து.....
பஞ்சபூதங்கள் சாட்சியாக.....
நான்கு வேதங்கள் முழங்க.....
மூன்று முடிச்சுகளால்.....
இருமனங்கள் ஒன்று சேரும்.....
ஓர் அற்புத பந்தத்தின் உறவே...
"திருமண உறவு"
இப்படி பொருத்தங்கள் பார்த்து நடந்து முடிந்த திருமண வாழ்க்கை கோர்ட்டுக்குச் செல்வது ஏன்?
"எல்லாப் பொருத்தங்களும் பார்த்துத்தானே என் மகளுக்கு / மகனுக்கு திருமணம் செய்தேன்". இப்படி பிரிந்து வாழ்கிறார்களே என்பதுதான் இன்று பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலாக இருக்கிறது.
ஜனபந்துக்கள், நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் விண்ணை வீழ்த்தும் வானவேடிக்கை, சான்றோர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்த, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத அக்னிசாட்சியுடன் அன்று நடந்த திருமணம் இன்று பிரிவினைக் கோலத்தோடு வழக்காடு மன்றத்திற்கு சென்றுவிட்டதன் காரணம்தான் என்ன? நீதிமன்றத்தில் இருவீட்டாரும் என்றுதான் விடிவுகாலம் கிடைக்குமோ, என்று காத்துக்கிடந்து கவலைப்படுவது நாளுக்குநாள் கூடிக்கொண்டு போவது ஏன்?
குடும்ப கௌரவம் பற்றி சிந்திப்பது இல்லை, தாய் தந்தையர், உடன்பிறப்பு பற்றி நினைப்பது இல்லை, பெற்றோர்களின் கண்ணீர் அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. இன்று உலகம் முழுவதும் இப்படிப்பட்ட திருமணங்கள் மிக வேகமாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.
எந்த வேகத்தில் திருமணம் நடந்ததோ அதே வேகத்தில் கோர்ட்டுக்கு விவாகரத்து கோரி வந்துவிடுகிறார்கள்
நான்கு சுவர்களுக்குள் நடக்கும் தங்கள் இல்லற வாழ்க்கையை கோர்ட்டில் பலபேர் முன்னிலையில் தாங்களே கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.
முன்பு ஒன்றுபட்டுவிட்டதாய் நினைத்த மனங்கள் இன்று இணைய மறுக்கின்றது.
மணமாகி நன்கு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகள் கூட கிரககோளாறுகள், ஏவல், செய்வினை போன்றவற்றால் ஆட்பட்டு தங்கள் சுயநிலை மறந்து ஒரு சாதாரணப் பிரச்சனைக்கு அவர்களை அறியாமலேயே விவாகரத்துக்கு சென்றுவிடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட காலம் முடிந்ததும் ஏன் இப்படி செய்தோம் என்று வருத்தப்படுகிறார்கள். இவைகள் எதனால் ஏற்படுகிறது.
நவக்கிரக தோஷமா?
பூர்வபுண்ணிய தோஷமா?
திருஷ்டி தோஷமா?
மற்றவர்களின் இடையூறா?
பிதுர் தோஷமா?
செய்வினை கோளாறுகளா?
இவைகளில் எது காரணம்? எனக்கண்டறிய மணமகன் / மணமகள் ஜாதகங்களை ஜோதிடத்தின் மூலம் ஆராய்ந்து அதில் உள்ள நன்மைகளை உணர்ந்து, தீமைகளுக்குண்டான நிவர்த்தியை செய்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைத்தால் அவர்களும் பிரிவினையில்லாமல் சந்தோஷமாக சோந்து வாழலாமே!
பாதிப்புகளுக்கு உண்டான ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து, கிரக ரீதியாக என்னென்ன பாதிப்புகள் உள்ளன. தீய சக்திகள், செய்வினை கோளாறுகளால் என்ன நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக்கூறி, அதற்கு நவகிரகங்களில் எந்த கிரகத்தை வணங்கி என்ன செய்து பாதிப்புகளை குறைத்து, நற்பலன்கள் பெற்று மகிழ்ச்சியுடன் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை அடைய வழிகாட்ட விடிவெள்ளியாய் திகழ்கிறது வெற்றிவேல் ஜோதிடாலயம்.
இங்கு சிறந்த முறையில் ஜோதிட வல்லுநர்களைக் கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், நன்மைகள் ஆகியவற்றை உள்ளது உள்ளபடி கூறப்படும்.
தொடர்பு கொள்ள
Sri Vetrivel Jothidalayam Trust, Palani
+91 75980 38063
Email ID - மின்னஞ்சல்contact@vetriveljothidalayam.com
Address :
41-A, Jawahar Street,
Opp to Thiru Aavinangudi Temple,
Adivaram, Palani,
Dindugal(D.T)-624601,
Tamilnadu State, South India.
முகவரி :41- A, ஜவஹர் வீதி,
திரு ஆவினன்குடி கோவில் எதிரில்,
அடிவாரம், பழனி
திண்டுக்கல் (D.T) - 624601,
தமிழ்நாடு, தென்இந்தியா.


